மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை 11.45 மணி அளவில்,அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தண்டவாளத்தின் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். ரயில் வருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவர்,ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். இதை கண்ட ரயில் ஓட்டுனர் வண்டியை கஷ்டப்பட்டு நிறுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார்,அந்த நபரை காப்பாற்றி அழைத்து வந்தனர்.ஓட்டுநரை வெகுவாக பாராட்டி இந்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் போலீசார் இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இது தற்கொலை தானா, இல்லை குடி போதையில் இந்த நபர் இவ்வாறு செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.