வைரல்

அடையாளம்: உதட்டில் மச்சம்!! பூனையை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம்... 

பூனையை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

பூனையின் வயது 6 என்றும்  பூனையின் பெயர் ஜெசி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பூனையின் அடையாளமாக உதட்டில் மச்சம் இருக்கும் எனவும் நவம்பர் 29ம் தேதி முதல் காணவில்லை என அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது. நீங்கள் எங்கள் பூனையை கண்டீர்கள் என்றால் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என தொலைபேசி எண்களை குறிப்பிட்டு பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு 5ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.