வைரல்

தூங்கி விட்டேனாம்... துபாயில் இறக்கிவிட்டார்கள்...சரக்கு ஏற்றும் தொழிலாளியின் குமுறல்

சரக்கு ஏற்றும் தொழிலாளி, சற்று அயர்ந்து உறங்கியதால் இண்டிக்கோ விமானம் அபுதாபியில் தரையிறக்கி எழுப்பிவிட்ட சம்பவம்  அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Malaimurasu Seithigal TV

உலக நாடுகளுக்கு இடையே சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய கார்கோ விமானங்கள் பயன்படுத்தப்படும். அதுபோல  இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து இண்டிக்கோ விமானம் அபுதாபிக்கு செல்லவிருந்துள்ளது.

சரக்கு கொண்டு செல்லும் இந்த இண்டிக்கோ விமானத்தில் சரக்குகளை கார்கோ தொழிலாளிக்கள் ஏற்றிகொண்டிருந்துள்ளனர். அப்போது சரக்குகளை ஏற்றிகொண்டிருந்த கார்கோ தொழிலாளி ஒருவர் அசதியில் சற்று கண்ணயர்ந்து உள்ளார்.

கொஞ்சம் நேரம் கழித்து அதிகாரி ஒருவர் சரக்குப் பெட்டகத்தில் தூங்கிய அந்த கார்கோ தொழிலாளியை எழுப்பியுள்ளார். அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விமானம் விட்டு இறங்கலாம் என நினைத்த போதுதான் விமானம் அபுதாபிக்கு வந்திறங்கியது அவருக்கு தெரியவந்தது.


இதனை தொடர்ந்து கார்கோ தொழிலாளிக்கு கொரோனா மருத்துவ சோதனை செய்யப்பட்டு மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கார்கோ தொழிலாளிக்கு மட்டுமல்லாமல் விமான நிறுவனத்துக்கும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.