வைரல்

பற்களால் ரிப்பனை வெட்டி புது கடையை திறந்து வைத்த அமைச்சர்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ...

கடை திறப்பு விழாவில் ரிப்பனை வாயால் கடித்து கடையை திறந்த பாகிஸ்தான் அமைச்சரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

Malaimurasu Seithigal TV

பஞ்சாபின் சிறைத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஃபயாஸ்-உல்-ஹசன் சோஹன், ராவல்பிண்டியில் ஒரு ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையை திறப்பதற்காக வந்தார்.அப்போழுது ரிப்பனை வெட்ட வழங்கப்பட்ட கத்திரிக்கோல் ரிப்பனை வெட்டததால், உடனே மற்றொரு கத்தரிக்கோலுக்கு காத்திருக்காமல் அவர் பற்களால் ரிப்பனை வெட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.