வைரல்

100-வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்

Malaimurasu Seithigal TV

மேரிலாந்து கவுண்டி எனும் பகுதியில் இணை பிரியாது வாழ்ந்து வரும் இரட்டையர்கள், தங்களது 100-வது பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டி எனும் பகுதியில் வசித்து வரும் இரட்டை சகோதரிகளான எலைன் ஃபாஸ்டர் மற்றும் ஈவிலின் லேன் ஆகியோரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரட்டையர்கள் வழக்கமாக செல்லும் உணவகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், உணவக ஊழியர்கள் கலந்துகொண்டு இரட்டை சகோதரிகளுக்கு மலர்கள், பூக்கள் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பித்தனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த இரட்டையர்கள், ஒருவருக்கொருவர் அக்கறையுடனும், அன்புடனும் இருப்பதாலே தங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.