வைரல்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை இருசக்கர வாகனத்துடன் கழிவுநீர் ஓடையில் தள்ளிவிட்ட பெண்...

அசாம் மாநிலம் கவுகாத்தியில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை இருசக்கர வாகனத்துடன் பெண் ஒருவர் கழிவுநீர் ஓடையில் தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

Malaimurasu Seithigal TV
கவுகாத்தியில் உள்ள சாலை வழியாக சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தில் சென்ற  நபர் வழிகேட்பது போல், அவருக்கு பாலியல் சீண்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், அந்த நபரை வாகனத்துடன் அருகிலிருந்த கழிவுநீர் ஓடையில் தள்ளியுள்ளார்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், ஓடையிலிருந்து வெளியேறியதோடு, வாகனத்தை மீட்க அவ்வழியாக சென்றோரின் உதவியை நாடியுள்ளார். இந்தநிலையில் அங்கு வந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி அப்பெண் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, அந்த நபருக்கு உதவ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த போலீசார், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.