வைரல்

தன்னை பார்த்துக்கொள்ள பெண் இல்லை, திருமணம் செய்து வையுங்கள் - ரோஜாவிடம் கோரிக்கை வைத்த முதியவர்!

Tamil Selvi Selvakumar

ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் முதியோர் உதவித்தொகை வருகிறதா எனக் கேட்ட அமைச்சர் ரோஜாவிடம் அதெல்லாம் வருகிறது, என்னை பார்த்துக்கொள்ளத் தான் யாருமில்லை திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்ட முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜா, தனது நகரி தொகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது என்னை பார்த்துக்கொள்ளத் தான் யாருமில்லை என ஒரு முதியவர் பாவமாக  தெரிவித்தார்.

இதனை எதிர்பாராத ரோஜா குபீரென சிரித்து விட்டு, அரசால் உதவித்தொகை தான் வழங்க முடியும், திருமணம் எல்லாம் செய்து வைக்க முடியாது என நகைப்புடன் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.