வைரல்

ஓடும் வேனில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாட்டம்! - வைரலாகும் சிறுவர்கள் வீடியோ...

விளாத்திகுளத்தில், ஆபத்தான முறையில் ஓடும் வேனில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி | உலகம் முழுவதும் நேற்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விளாத்திகுளம் பகுதியில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக, சில சிறுவர்கள் செய்தது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

2023ம் ஆண்டு தொடங்கிய இன்று, ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் மேலே ஏறி அமர்ந்து கொண்டு சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்து, கூச்சலிட்டு ஆரவாரம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த காட்சிகளில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் செயலில் ஈடுபட்டிருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.