வைரல்

சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்யும் போக்குவரத்து காவலர்..! வைரலாகும் வீடியோ!

Tamil Selvi Selvakumar

போக்குவரத்து காவலர் ஒருவர் சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் சிதறிக்கிடக்கும் சிறுசிறு பாறைக் கற்கள் மற்றும் கூழாங்கற்கள் மீது வாகனங்கள் சென்றால், வாகனத்தின் சக்கரம் பஞ்சர் ஆகி, அதனால் விபத்துகள் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது.

இதனை உணர்ந்த டெல்லி போக்குவரத்து காவலர் ஒருவர், கையில் துடைப்பத்தை எடுத்து சாலையை சுத்தம் செய்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.