வைரல்

தொழிலாளிகளிடம் காஃபி ஆர்டர் வாங்கும் ட்விட்டர் சி.இ.ஓ...வைரலாகும் புகைப்படங்கள்..!

ட்விட்டர் தளத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் தனது UK அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த தனது தொழிலாளிகளுக்கு காஃபி ஆர்டர் எடுத்த சம்பவம், நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Malaimurasu Seithigal TV

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டர் ஊழியர்களை சந்தித்துப் பேசினார். முன்னதாக மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கவிருந்தார். இது பற்றி மஸ்க்கின் கூறுகையில், சீனாவில் உள்ள WeChat போன்ற ஒரு சூப்பர் செயலியாக ட்விட்டர் உருவாக வேண்டும் என்று கூறி இருந்தார். சமூக ஊடக வலையமைப்பில் ஸ்பேம், பாட்கள் மற்றும் போலி கணக்குகள் பற்றிய கூடுதல் தகவல்களை அவர் தேடியபோது, ட்விட்டரை வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் கடந்த மே மாதம் கூறியிருந்தார். ட்விட்டர் எவ்வாறு மோசடி கணக்குகளை மதிப்பிட்டது என்பதை அகர்வால் ஒரு நீண்ட நூலில் விளக்கியபோது, மஸ்க் ஒரு பூப் ஈமோஜியைப் பயன்படுத்தினார்.

இப்படி , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க், ட்விட்டரில் அகர்வாலை அவமதித்ததன் விளைவாக, அகர்வால் மற்றும் மஸ்க் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கடந்த வாரம், லண்டனில் நடந்த பல வணிக நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அகர்வால் UK சென்றிருந்த போது அங்கு நடந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, நகைச்சுவை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், அகர்வால், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் லண்டன் அலுவலகத்தில் தனது ஊழியர்களுக்கு காஃபி ஆர்டர்களை எடுத்தார்.

ட்விட்டரின் இங்கிலாந்து கிளை நிர்வாக இயக்குநர் தாரா நாசரும், அகர்வாலுடன் இணைந்து இருந்தது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரியான நெட் செகல் தனது காஃபியுடன் செல்ல சில குக்கீஸ்களையும் வழங்கினார், பராக் . இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி தன் மீதான அவமானங்களை மறைத்துக்கொள்ள இப்படி செய்தாரா என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக ட்விட்டரின் நிறுவனர் ஜாக் டோர்சி நவம்பர் 2021 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, அகர்வால் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.