வைரல்

மணிப்பூர்  வன்முறையில் மேலும் இரண்டு பெண்கள்..?

Malaimurasu Seithigal TV

மணிப்பூர்  வன்முறையில் மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மெய்தி சமூகத்தினருக்கும்  குகி சமூகத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வன்முறை  தொடர்பாக சட்டமன்ற  உறுப்பினர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், வன்முறை நிகழ்ந்த இரண்டாம் நாளில் கோனுங் மனாங் பகுதியில் இரண்டு குகி இன பெண்களும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வானமாக அழைத்துச் சென்ற வீடியோவில் இருந்த மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும்  மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.