கலிபோர்னியா வில் வசிக்கும் ஒரு பஞ்சாபி குடும்பத்தினரின் இல்ல திருமண விழா கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது சத்தம் அதிகமாக இருப்பதாக கூறி அருகே வசிப்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சத்தத்தை குறைத்துக்கொள்ளுமாறு கூறினர்.
தொடர்ந்து தங்களுடன் சேர்ந்து நடனமாடினால் சத்தத்தை குறைத்துக் கொள்வதாக விருந்தினர்கள் தெரிவித்தனர். இதற்கு ஒப்புக்கொண்ட போலீசார் அவர்களுடன் இணைந்து பஞ்சாபி இசைக்கு நடனமாடினர்.