மணமக்களை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்பட கலைஞர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா சூழல் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் அண்மையில் பஞ்சாபிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதி, வீட்டிலிருந்து நடந்து வெளியே வந்துள்ளனர்.
அவர்களை படம்பிடித்தபடி வந்து கொண்டிருந்த புகைப்பட கலைஞர், எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார். இதனை கண்டு மணமகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி கூச்சலிட்ட வீடியோ தற்போது வௌியாகியுள்ளது.