வைரல்

ஆற்றில் கார் மூழ்குவதை கண்டு ஓடி வந்த பொதுமக்கள்.. Cool ஆக நின்று செல்பி எடுத்த பெண்

Malaimurasu Seithigal TV

கனடாவில், உறைந்த ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த கார் மீது நின்றபடி பெண் ஒருவர் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

கனடாவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் சாலைகள், வீடுகள் எங்கிலும் கடும் வெண்பனி படர்ந்துள்ளது. அண்மையில், கடுங்குளிருக்கு இடையே காரை எடுத்து வெளியே சென்ற பெண் ஒருவர் ரைடோ ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இந்தநிலையில் அவரது வாகனம் ஆற்றில் மூழ்குவதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓடோடி வந்த போதும், பெண் எவ்வித சலனமும் இன்றி, காரின் பின்புறம் மீது ஏறி செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் பெண்ணின் செயலை விமர்சித்து வருகின்றனர்.