வைரல்

ரைஸ் குக்கரை திருமணம் செய்த வாலிபர்... 4 நாட்களில் விவாகரத்து பெற்றார்...

இந்தோனேசியாவில் ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து பெற்ற வினோத நபர், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

Malaimurasu Seithigal TV

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம், ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் திருமணத்தை சட்டப்பூர்வமாக மாற்ற, திருமண ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், குக்கரை கட்டி பிடித்து, அவர் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஆனால் 4 நாட்களுக்கு பிறகு தமது மனைவியை விவாகரத்து செய்வதாக அனாம் அறிவித்துள்ளார்.

அவள் அரிசி சமைப்பதில் மட்டுமே வல்லவள் என்றும், வேறு உணவுகளை சுவையாக சமைக்க அவளுக்கு தெரியாது எனவும், பிரிவுக்கான காரணம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, இது போன்ற நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.