மற்றவை

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் விஆர் சவுத்ரி....

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விஆர் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Malaimurasu Seithigal TV

இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகித்து வந்த ஆர்.கே.எஸ். பதாரியா-வின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இந்திய விமானப்படையின் துணைதளபதியாக பதவி வகித்து வந்த விஆர் சவுத்ரி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக வி.ஆர். சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார். அனுபவமிக்க விமானியான சவுத்திரி மிக் -21, மிக் -29 மற்றும் சுகோய் -30 போன்ற பல்வேறு போர் விமானங்களில் 3 ஆயிரத்து 800 மணி நேரத்திற்கும் மேலாக பறந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.