ஒமிக்ரான் பாதிப்பு பட்டியலில் டெல்லி தொடர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது. மேலும் அங்கு கொரோனா தினசரி பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே டெல்லியில் 15 ஆம் தேதிக்குள் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை கடக்க கூடிய ஆபத்து உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது. இந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் காணொலி வாயிலாக இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறது.
இதில் பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை விதிக்க முடிவு செய்யப்படும் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.