இந்தியா

காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கைக்கு மத்தியில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் 130-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக ஜல்பாய்குரி சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.