இந்தியா

கடந்த ஆண்டு மட்டும் 165 பேருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை...

2022ல் 165 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு... இது வரையில்லாத அளவு அதிகபட்ச தண்டனைகள் விதிக்கப்பட்டதாகத் தகவல்...

Malaimurasu Seithigal TV

டெல்லியில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு 2022ல் 165 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  2021ல் மரண தண்டனைக்கு அனுப்பப்பட்ட 146 கைதிகளை விட கடந்த ஆண்டு அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மரண தண்டனை வழக்குகளில், குற்றவாளி பாலியல் குற்றத்தை செய்துள்ளார்.

இதனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 539 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது நீதிமன்றங்களில் விசாரணை வளர்ந்து வரும் போக்கையும் பிரதிபலிக்கிறது என கூறப்படுகிறது.