இந்தியா

கர்நாடக தேர்தல் களத்தில் கிராம மக்கள் வாக்குவாதம்...அடித்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

Tamil Selvi Selvakumar

விஜயநகர் மாவட்டத்தில் மசபின்னலா வாக்குச் சாவடியில் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பசவன் பாகேவாடி தாலுக்காவில் உள்ள மசபின்னலாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதனிடையே வாக்குப் பதிவிற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை தவிர்த்து இயந்திரங்கள் பழுதடைந்தால் அதை மாற்றுவதற்காக கூடுதலாக  இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவி பேட் இயந்திரத்தை வேறு அறையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை  திட்டமிட்டு வேறொரு அறையில் வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் வேறு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னனு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரத்தை சாலையில் போட்டு உடைத்தனர். இது தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கிராமம் முழுவதும் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.