இந்தியா

மிக்சர் சாப்பிட்ட 3 சகோதரிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலி

உத்திர பிரதேசத்தில் பொரி சாப்பிட்ட 3 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உத்திர பிரதேசத்தில் பொரி சாப்பிட்ட 3 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேபரேலி மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அரிசி பொரி மற்றும் மிக்சர் சாப்பிட்ட 3 சகோதரிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த சிறுமிகளில் உடல்களை அவர்களது தந்தை அவசர அவசரமாக தகனம் செய்ய முற்பட்டுள்ளார். இதனால் சிறுமிகளின் உயிரிழப்பில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகித்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிகள் உட்கொண்ட பொரி மற்றும் மிக்சரின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.