இந்தியா

384-வது சென்னை தினம்: இ.பி.எஸ் வாழ்த்து...!

Malaimurasu Seithigal TV

சென்னை தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும்  தமிழ்நாட்டின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது:- 

” சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும்  தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை  தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 384.

உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்! சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் மெட்ராஸ் தின வாழ்த்துகள்

இது நம்ம சென்னை! “