இந்தியா

முன்னாள் பிரதமர் நேருவின் 58-வது நினைவு தினம்..! சோனியா காந்தி அஞ்சலி

Tamil Selvi Selvakumar

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-வது நினைவு தினத்தை ஒட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மறைந்து இன்றுடன் 58 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்திடும் வகையில், காங்கிரஸ் சார்பில் டெல்லி சாந்திவன்னில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று அவரது நினைவிடத்திற்கு வருகை தந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.