இந்தியா

காற்று மாசுவால் 75% குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறல்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்...

டெல்லியில் நிலவும் காற்று மாசுவால் 75 சதவீதம் குழந்தைகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

டெல்லியில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், வழக்கம் போல், காற்றின் தரம் மோசடமைந்து வருகிறது. குறிப்பாக காற்றில் பிஎம் 2 புள்ளி 5  மாசு துகள்கள் அதிகம் படிந்திருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் மோசமான காற்று மாசு காரணமாக குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என தெரி(TERI) என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இதற்கென 14 முதல் 17 வயது வரையிலான 413 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 75 புள்ளி 4 சதவீதம் குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் திணறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது 24 புள்ளி 2 சதவீதம் குழந்தைகள் கண்ணெரிச்சல் பாதிப்புக்கும், 22 புள்ளி 3 சதவீதம் குழந்தைகள் தொடர் தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அழற்சிக்கு ஆளாகுவதும்  கண்டுபிடிக்கப்பட்டது.