இந்தியா

ஓரமாக நடந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை... பரபரப்பு சிசிடிவி...

கேரளாவில் சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து, பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கேரளா | எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரக்கப்பாடி சாலையின் ஓரம் நேற்று மாலை 5 மணி அளவில் பெண் ஒருவர் சாலையின் ஓரம் நடந்து சென்றுள்ளார். அதே நேரத்தில்  பெஞ்சசேரி பகுதியில் அந்த பெண் நடந்து வரும்போது, பெட்ரோல் பங்க் நோக்கி திரும்பிய தனியார் பள்ளி பேருந்து ஒன்று அவர் மீது மோதியதுடன், அந்தப் பெண் பேருந்தின் அடிப்பகுதியிலும் சிக்கி உள்ளார்.

இந்த விபத்தை பார்த்த அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூச்சலிட்டு ஓடி சென்று பேருந்தை நகர்த்த செய்து அந்தப் பெண்ணை பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து மீட்டனர்.

இந்த விபத்தில் தலையிலும் வயிற்று பகுதியிலும் பலத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து அரக்கப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்து டிரைவரின் கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து பள்ளி பேருந்தின் டிரைவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கும் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.