இந்தியா

ஐயப்பனை தரக்குறைவாக பேசியதால் வழக்கு பதிவு?!!

Malaimurasu Seithigal TV

நாத்திகவாதிகளின் சங்கத்தின் தலைவர் பாரி நரேஷ், ஐயப்ப சுவாமியை தரக்குறைவாகப் பேசிய நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் அவர் மீது பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கோடங்கலில் உள்ள ஐயப்ப பக்தர்கள், நாத்திகர் சங்கத்தின் தலைவர் பேரி நரேஷ் மீது 3 காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக பாரி சுரேஷ் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் சுவாமி ஐயப்பனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது தடுப்புக் காவல் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

-நப்பசலையார்