திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை அட்டகாசத்தால் மாணவர்கள் அசசமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வெட்னரி யுனிவர்சிட்டி என்ற பெயரில் கால்நடை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்கு அவ்வப்போது சிறுத்தை, காட்டு பன்றி, கரடி, மான் ஆகிய வனவிலங்குகள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு அங்கு வந்த சிறுத்தை, நாய் ஒன்றை தாக்கியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்த்து அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : தாய்க்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவி...!