இந்தியா

ஓடும் பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபர்.. ஆந்திராவில் பரிதாபமான சம்பவம்!!

Suaif Arsath

ஆந்திராவில் ஓடும் பேருந்தில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

தற்கொலை முயற்சி

ஆந்திர மாநிலம் நந்தியாலா அருகிலுள்ள பங்கனபள்ளி பேருந்து நிலையத்தில் சற்று நேரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்து கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென்று கர்னூல் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் கீழ் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த பயணிகள் கூச்சலிட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.

போலீசார் வழக்கு பதிவு

அதற்கும் அவர் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில் அந்த நபர் உடல் நசுங்கி பாலியனார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்கனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தற்கொலை ஒரு சிறந்த தீர்வாக இருக்குமா?

ஏதாவதும் ஒரு கஷ்டம், வேற ஏதாவது பிரச்சனை இருந்தால், உடனே தற்கொலை என்று முடிவு எடுக்கிறார்கள் சிலர். அதுவும் இன்றைய காலத்தில் தற்கொலை என்பது சாதாரணமாக ஆகிவிட்டது. என்ன பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனைக்கு தற்கொலை என்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்குமா?