இந்தியா

இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு...! பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இரு சக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பை பொதுமக்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டு வனத்துறையில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த அங்கிருந்த பொது மக்கள், வாகனத்தில் இருந்து பாம்பை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர், அப்போது வாகனத்தின் பாகங்களை தனிதனியாக பிரித்து உள்ளே இருந்த பாம்பை சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். அதில் 3 அடி நீளமுள்ள குட்டி நல்ல பாம்பை மீட்டு வனத்துறையில் ஒப்படைத்தனர்.