இந்தியா

தலைநகரில் டயர் கடையில் திடீரென தீ விபத்து...

Malaimurasu Seithigal TV

டெல்லியில் உள்ள டயர் கடையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாயாபுரி பகுதியில் உள்ள டயர் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய டயர்கள்  எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடடியாக சம்பவ இடத்திற்கு 17 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சென்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.