இந்தியா

அப்பா!!! என்னா நடிப்புடா சாமி!!!- கெஜ்ரிவால் பற்றி கமெண்ட் செய்த பாஜக!!!

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் உணவருந்த சென்ற கெஜ்ரிவாலை காவலர்கள் தடுத்தனர். அதற்கு அவர் செய்தது பல கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது!!!

Malaimurasu Seithigal TV

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தலைநகர் டெல்லியின் முதலமைச்சரும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கென்று தனி ரசிகர் கூட்டமே வைத்திருக்கிறார். அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனி மனிதராக அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வரிசையில், அகமதாபாதில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர், தனது வீட்டிற்கு அவரை விருந்திற்கு அழைத்திருக்கிறார். அதற்கு கெஜ்ரிவாலும் கிளம்பி இருக்கிறார். ஆனால், தனது சைரன் வைத்த அரசு வாகனத்திலோ, தனது சொந்த வாகனத்திலோ அல்ல. தன்னை மதித்து அழைத்த அந்த ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவிலேயே!!! ஆம்!!  இது பலருக்கும் தெரிந்து அங்கு கூட்டும் கூடியுள்ளது.

இதனால், பாதுகாப்பு காரணமாக, காவலர்கள் கெஜ்ரிவாலை ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளனர். ஆனால், அதை மதிக்காமல், கெஜ்ரிவால் தான் மட்டுமின்றி, குஜராத்தின் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கோபால் இடாலியா மற்றும், கட்சியின் தேசிய இணை பொது செயலாளர் இசுடன் காத்வி ஆகியோருடன் இணைந்து, அந்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு அவரது ஆட்டோவிலேயே சென்று, அவருடன் சமமாக தரையில் அமர்ந்துவிருந்து சாப்பிட்டுள்ளனர். மேலும், இதன் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் கெஜ்ரிவால்.

இந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது படு வைரலாகி வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான கட்சி சார்ந்த பிரச்சாரத்திற்காக, தனது இரண்டு நாள் குஜராத் பயணத்தின் போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. தான் ஒரு மிகப் பெரிய ரசிகர் என கெஜ்ரிவாலிடம் அறிமுகப் படுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர், தனது வீட்டில் அவர் சாப்பிட்டால் மகிழ்ச்சி அடைவார் எனக் கூறினார். இரண்டாம் முறை கூட யோசிக்காத கெஜ்ரிவால் உடனேயே அவருடன் கிளம்பியது தான் அந்த நெகிழ்ச்சியான சம்பவம்.

भाजपा गुजरात में बुरी तरह से बौखलाई। @ArvindKejriwal @Gopal_Italia और @isudan_gadhvi को एक सामान्य रिक्शा वाले के वहाँ खाना खाने जाने से रोका। pic.twitter.com/V04cLbEgLT — Dr Safin