இந்தியா

வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்க்க முயலும் காட்டுயானை...! வீடியோ வைரல்...!

Malaimurasu Seithigal TV

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி வனப்பகுதியில் அதிராப்பள்ளி வன சாலையில் மலக்கம்பாறை என்ற பகுதியில் படையப்பா என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை ஒரு சில தினங்களாக மிகவும் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும், வாகனங்களை சேதப்படுத்துவதும் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. 

இதையடுத்து வனத்துறையினர் அந்த சாலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த காட்டு யானை அவர்களது ஜீப்பை தும்பிக்கையால் கவிழ்க்க முயன்றுள்ளது. இதை அடுத்து பல மணி நேரம் போராடி, கூச்சலிட்டு அந்த காட்டு யானையை விரட்டினர். இதை தொடர்ந்து வனத்துறையினர் கூறுகையில், இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் யானையை கண்டால் வாகனத்தை நிறுத்தவோ அல்லது வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படங்கள் எடுக்க முயலவோ வேண்டாம் எனவும் கூறியதோடு, மதம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறி வனத்துறையினர் காட்டு யானையை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்க்க முயன்ற காட்டு யானையின் வீடியோ காட்சிகள் தற்போது இணையங்களிலும் வைரல் ஆகி வருகின்றன.