இந்தியா

ஆஸ்திரேலியாவில் கோயில்கள் தாக்கப்படுவதால்...நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் உறுதி - பிரதமர் பேட்டி!

Tamil Selvi Selvakumar

ஆஸ்திரேலியாவில் இந்தியக் கோவில்கள் தாக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் உறுதியளித்ததாக இருதரப்பு பேச்சுவாத்தைக்குப்பின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியா - இந்தியாவுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் கண்டுகளித்தார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமையான இன்று குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் ஆண்டனி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும், சிவப்புக் கம்பள வரவேற்பையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களும் கலந்துரையாடினார்கள்.

அப்போது சோலார் task force, ஆடியோ விஷ்வல் இணை தயாரிப்பு ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக விவாதித்ததாகவும், ஆஸ்திரேலியாவில் இந்தியக் கோவில்கள் தாக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் உறுதியளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள்  இறுதி செய்வதாக ஆண்டனி ஆல்பனீஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.