இந்தியா

மத்திய அரசு பணிக்காக போதுமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை- மத்திய அரசு குற்றச்சாட்டு

மத்திய அரசு பணிக்காக போதுமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மத்திய அரசு பணிக்காக போதுமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்காக தாங்களே எடுத்துக்கொள்ளும் வகையில் ஐ.ஏ.எஸ். விதிகள் 1954-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அந்த வகையில், மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 309 ஆக இருந்த நிலையில், தற்போது 223 ஆக குறைந்திருப்பதாக பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.