இந்தியா

கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி... ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைக்கிறார்...

பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

Malaimurasu Seithigal TV

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரபல ஆன்மிக சுற்றுலா தலமான கேதார்நாத் பகுதியில், ஆதி சங்கராச்சாரியாருக்கு 12 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆதி சங்கரர் அமர்ந்த கோலத்தில், 35 டன் எடை கொண்ட இந்த சிலை, மைசூரை சேர்ந்த அனுபவமிக்க சிற்பிகளால் செதுக்கப்பட்ட கோலரைட் ஸ்கிட் கல்லால் உருவானது. மேலும் இந்த சிலை, அதீத பருவநிலை மாற்றத்தையும், வெயிலையும், மழையையும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.

இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்வதுடன், ஆதி சங்கராச்சாரியார் சமாதி ஸ்தலத்தை திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு நடைபெற்று வரும் நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் அவர், உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.