Air India Ahmedabad plane crash 
இந்தியா

நாட்டையே உலுக்கிய விமான விபத்து!! முதற்கட்ட அறிக்கை வெளியானது…! “விமானிகள் இறுதியாக பேசியது என்ன!?

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துப் புலனாய்வு அமைப்பு (AAIB) முழுமையான விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில்...

மாலை முரசு செய்தி குழு

குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12ஆம் தேதி துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த 241 பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய ஒரே பயணி பிரிட்டிஷ் – இந்திய நபர் ஆவார். மேலும், அந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விழுந்ததில், மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்துப் புலனாய்வு அமைப்பு (AAIB) முழுமையான விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். விசாரணை AAIB இயக்குநர் ஜெனரல் தலைமையில் நடந்து வந்தது. 
விபத்து நடந்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் கருப்பு பெட்டி (Black Box) ஜூன் 13ஆம் தேதி மீட்கப்பட்டது. விமானம் மோதி விழுந்த விடுதியின் கூரையில் இருந்து கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது. இதில் ‘Cockpit Voice Recorder’ (CVR) மற்றும் ‘Flight Data Recorder’ (FDR) என இரண்டு முக்கிய சாதனங்கள் உள்ளன. CVR மூலம் விமான அறையில் நடந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படும். FDR மூலம் விமானத்தின் பறப்பு உயரம், வேகம் மற்றும் விமானி செலுத்திய முறைகள் உள்ளிட்ட தகவல்கள் சுமார் 25 மணி நேரம் வரை சேமிக்கப்பட்டது.

என்ன காரணம் 

விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன. இதற்கு இன்ஜின்களுக்குச் செல்ல வேண்டிய எரிவாயு நின்றதே காரணம்.விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு 'RUN'-ல் இருந்து 'CUTOFF'-ற்குச் சென்றுள்ளது. இதை காக்பிட்டில் இருந்த விமானிகளின் பேச்சும் உறுதி செய்துள்ளன. காக்பிட் ஆடியோவைக் கேட்கும்போது, ஒரு விமானி இன்னொரு விமானியிடம், 'ஏன் அதை கட் ஆஃப் செய்தீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர், 'நான் செய்யவில்லை' என்று கூறுகிறார். இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தியதும், புரொப்பல்லர் போன்ற சின்ன கருவி, Ram Air Turbine எமர்ஜென்சி கால உதவியாக வேலை செய்ய தொடங்கியுள்ளது. ராம் ஏர் டர்பைன் என்பது அவசரகாலத்தில் உதவும் இன்ஜின் போன்ற கருவியாகும். இதை விமான விபத்து விசாரணை பணியகம் ஆய்வு செய்த சி.சி.டி.வி கேமராக்களிலும் உறுதியாகி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.