குஜராத்திலிருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறியுள்ளது. சிதறிய இடத்திலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.
1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால் ‘May Day Call” செய்துள்ளர். தொடர்பு கொண்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீண்டும் விமானடஹி கட்டுப்பாட்டு முறையால் தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
242 க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் இருந்ததாகக் தெரிகிறது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் இந்த விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகின்றன.
மேலும் 242 பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். இதில் 1169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஸ்காரர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடா நாட்டை சேர்ந்தவர் உள்பட விமான ஊழியர்கள் சிலரும் இந்த விபத்தில் இருந்துள்ளனர்.
மேலும் நொறுங்கி விழுந்த இந்த விமானம் மருத்துவர் விடுதி ஒன்றின் மீது விழுந்துள்ளது. அங்கேயுள்ள மருத்துவர்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த கோரமான சம்பவத்தில் பலி ன்னிகை இன்னும் அதிகமாகலாம் எனக்கூறப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் உரிமை சொத்தான ஏர் இந்தியா நிறுவனம் இந்த விபத்திற்கு பொறுப்பேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இந்த போயிங் -ன் Black Box கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.