ramesh - who survived in the major accident Admin
இந்தியா

“ரமேஷ்” -எமனையே ஏமாற்றிய Survivor..! அகமதாபாத் விமான விபத்தில் திடீர் திருப்பம் !

11 A -இருக்கையில் இருந்த ரமேஷ் என்ற நபர் காயங்களோடு உயிர் தப்பியுள்ளதாக ...

Saleth stephi graph

குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறியுள்ளது. விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.

1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால்  ‘May Day Call” செய்தார். கட்டுப்பட்டு அறையை  தொடர்புகொண்ட 3 நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீண்டும் விமானிகளை  கட்டுப்பாட்டு அறையால் தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும்  இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணித்த 242 பேரும்  இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் 11 A -இருக்கையில் இருந்த ரமேஷ் என்ற நபர் காயங்களோடு உயிர் தப்பியுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் மாலிக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.