இந்தியா

ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கு பாதுகாப்பு

ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் ஹஜ் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் ஹஜ் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஹஜ் பயணம் குறித்த கலந்துரையாடலில் பேசிய ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சவுதி அரேபியா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மனதில் கொண்டு 2022ம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஹஜ் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்ள, 2020, 2021ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த 3 ஆயிரம் பெண்களின் விண்ணப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு அவர்கள் ஹஜ் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.