இந்தியா

அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்.. ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Suaif Arsath

அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்குள்ள குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வீரர்கள் அங்கு சென்ற நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட, இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ள நிலையில், யாத்ரீகர்கள் செல்லும் பாதை அருகே இந்த என்கவுன்டர் நிகழ்த்தப்பட்டது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.