இந்தியா

இவர்கள் செத்தால் தான் எனக்கு காசு கிடைக்கும்,.. கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்.!  

Malaimurasu Seithigal TV

புதிதாக யாரும் உயிரிழக்காத நிலையில்  தனக்கு வருமான இழப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் இணைப்பை அணைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் குழாயில் இருந்து ஆக்சிஜன் வருவது தடைபட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். 

அப்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் இணைப்பை யாரோ அணைத்து வைத்துள்ளதை கண்டுபிடித்து உடனே அதை சரி செய்தார்கள். இதன் காரணமாக எந்த நோயாளியும் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை.

அதன்பின் இந்த சம்பவத்தை செய்தது யார் என்று அறிய அங்கிருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது இணைப்பை அணைத்த நபர் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவர் என்பது தெரியவந்தது. 

உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளிக்க விரைந்து வந்த காவலர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பிடித்து இப்படி செய்ததன் காரணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர் கூறிய பதில் காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூன்று நாட்களாக மருத்துவமனையில் யாரும் உயிரிழக்காததால் காசு இல்லாமல் தவித்ததால் இப்படி செய்ததாக டிரைவர் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் அடித்து உயிரின் அருமை தெரியுமா? என்று ஆம்புலன்ஸ் டிரைவரை லத்தியால் அடித்தனர். மேலும் அவரை கைதுசெய்து சிறையில் அடித்தனர்.