இந்தியா

பணியில் வீரமரணமடைந்த காவலர்களின் வீரவணக்க நாள்...மரியாதை செலுத்திய அமித்ஷா ...!

Tamil Selvi Selvakumar

எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்த பிறகு, இந்தியா அனைத்து துறை சார்ந்த வளர்ச்சிகளை நோக்கி முன்னேறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி:

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, காவலர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.  மேலும் காவல்படை சார்பிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அமித்ஷா பெருமிதம்:

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித்ஷா, கொரோனா பேரிடரின்போது, காவலர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். நாட்டிற்காக வீரமரணமடைந்த காவலர்களின் முயற்சி வீண்போகாது என கூறிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு, காஷ்மீரின் பாதுகாப்பு பெருமளவு முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டிஜிபி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள்:

இதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பணிநேரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று, திரிபுரா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.