டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் காரில் குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த சோகம் அடங்குவதற்குள்ளவே மற்றொரு துயம் அரங்கேறியுள்ளது.
கடந்த 14 -ஆம் தேதி இரவு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையம் தீக்கிரையானதுதான் அந்த கோர சம்பவம். ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மற்றும் உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு பயங்கரவாதிகள் கைது நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையம் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த வெடிப்பொருட்கள் நள்ளிரவில் திடீரென்று வெடித்து சிதறியதில் மொத்தம் 12பேர் உயிரிழந்துள்ளனர். 24 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் நவ்காம் என்ற போலீஸ் நிலையம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த காவல் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்த சமயத்தில் அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்களை இந்த போலீஸ் நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் நவ்காம் போலீஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்த வெடிப்பொருட்களை ஆய்வுக்காக சாம்பிள் எடுத்தபோது திடீரென்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையமே பற்றி எரிந்துள்ளது. மேலும் இதில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அம்மோனியம் நைட்ரேட்டும் இருந்ததால், பெரும் அழுத்தத்துடன் கூடிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த விபத்தில் பலரின் உடல் பாகங்கள் ரோட்டில் சிதறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், கூடுதல் போலீசார், ராணுவத்தினர் உடனடியாக போலீஸ் நிலையம் விரைந்தனர். தீயில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் இது எதிர்பாராத விபத்து என்பது தெரியவந்துள்ளது. இந்த வெடிப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால். தீப்பிழம்பு பல அடி உயரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், கூடுதல் போலீசார், ராணுவத்தினர் உடனடியாக போலீஸ் நிலையம் விரைந்தனர். தீயில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காவல் நிலையம் முற்றிலுமாக சிதைந்து போயுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.