இந்தியா

ஒரு கட்டுக்கடங்காத காளை பா.ஜ.க.விற்கு உதவுகிறது... விவசாய சங்க தலைவர் விமர்சனம்...

ஒரு கட்டுக்கடங்காத காளை பா.ஜ.க.விற்கு உதவுவதாக விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

ஒரு கட்டுக்கடங்காத காளை பா.ஜ.க.விற்கு உதவுவதாக, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லீம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியை, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் விமர்சித்துள்ளார்.

ஹைதராபாத் பயணத்தின்போது கூட்டத்தில் உரையாற்றிய ராகேஷ் திகாய்த், பா.ஜ.க.விற்கு ஓவைசி மிகவும் உதவுவதால், அவரை மாநிலத்திலேயே கட்டிப் போட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றும் போது ஓவைசி வேறு ஏதோ சொல்கிறார் என்றும், அவருக்கு வேறு சில இலக்கு இருப்பதாகவும், எனவே அவரை ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவிற்கு வெளியே செல்ல விடாதீர்கள் எனவும் விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.