நாடு முழுவதும் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும். அங்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை.
இந்த புதிய சாதனையின் மூலம் தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திரா மற்ற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கியுள்ளது.