இந்தியா

 ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடங்கியது!

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறையினின் ஆய்வுப் பணிகள் தொடங்கின. 

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சிலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து மசூதிக்குள் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்துக்கள் சிலர் வாரணாசி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில், மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், மசூதி நிர்வாகம் தொல்லியல்துறை ஆய்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து, ஆய்வு நடத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அறிவியல் ஆய்வு  நடத்துவது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் விசாரணையில் கடந்த 30-ம் தேதி அகழாய்வு தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில்,  இன்று அகழாய்வு பணிகள் தொடங்கின. இதையடுத்து மசூதி அருகே அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.