இந்தியா

பசுமாட்டை கடத்தி செல்கிறாயா? இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்... ராஜஸ்தானில் தொடரும் அட்டூழியம்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பசுமாட்டை கடத்தி செல்வதாக சந்தேகப்பட்டு இருவரை ஒரு கும்பல் பயங்கரமாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பசுமாட்டை கடத்தி செல்வதாக சந்தேகப்பட்டு இருவரை ஒரு கும்பல் பயங்கரமாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் வசிக்கும் பெரும்பாலானோரின் தொழிலே கால்நடைகளை வளர்ப்பது தான். எனவே தான், ராஜஸ்தான் 2வது பெரிய கால்நடை வர்த்தகமாக ராஜஸ்தான் திகழ்கிறது. எனினும் கடந்த முறை பாஜக ஆட்சி அமைத்தது முதல் தற்போது வரை பசுவை காக்கிறோம் என்ற பெயரில் அங்கு நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2017-ல், பெலுகான் என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து சில பசுமாடுகளை வாங்கி கொண்டு தன்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் அவரை வழிமறித்து தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று தற்போது, மத்திய பிரதேசத்தின் அச்சல்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில் மற்றும் அவரது நண்பர் பிந்து ஆகிய இருவரும் வேனில் மாடுகளை ஏற்றி கொண்டு ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மறித்த ஒரு கும்பல் மாடுகளை கடத்தி செல்கிறீர்களா என கேள்விக்கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பித்து ஓடினர். இதற்கிடையே படுகாயமடைந்த இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் வழியிலேயே பாபு லால் பில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.