இந்தியா

மாநில எல்லையில் வாகனங்கள் மீது தாக்குதல்... அசாம் - மிசோரம் எல்லையில் பதற்றம்...

அசாம் எல்லைக்குள் நுழைந்த மிசோரம் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், மீண்டும் இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் மூண்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV

அசாம்-மிசோரம் எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காவலர்கள் 6 பேரை மிசோரம் போலீசார் சுட்டுக்கொலை செய்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி அதன் முதல்வர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்தனர்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று இரு மாநில அமைச்சர்களும் பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டு, அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், நேற்று அசாம் எல்லை பகுதியான Cachar மாவட்டத்திற்குள் நுழைந்த மிசோரம் மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை உள்ளூர் மக்கள் கற்களை வீசியும், அடித்து நொறுக்கியும் உள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது அந்த மண்டலத்தில் இரு அமைச்சர்கள் உள்ளூர் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.