இந்தியா

இனி அஜித், விஜய்க்கு கைதட்டுவதற்கு பதில் இவர்களுக்கு தட்டுங்கள்; இசைவெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை!

’மகாத்மா காந்தி ‘ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித், விஜய்க்கு கைதட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு தட்டுங்கள் என புதுவை கவர்னர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

புதுச்சேரியில் நடைபெற்ற ‘மகாத்மா காந்தி’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த விழாவில் ’மகாத்மா காந்தி’ படத்தின் குறுந்தகட்டை (குறுந்தகடு) புதுவை கவர்னர் வெளியிட்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை விட அஹிம்சாவாதி காந்திக்கு கை தட்டுங்கள் என்றும், நடிகர் விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக விடுதலை பெற்றுத்தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என்றும் கூறிய தமிழிசை, அதற்காக அஜித், விஜய்க்கு கை தட்ட வேண்டாம் என்று தான் கூறவில்லை.

அவர்களுக்கு கை தட்டுவதை விடவும் அதிகமாக காந்திக்கும் வ.உ.சிக்கும் கைதட்ட வேண்டும் என்று தான் கூறுகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனையடுத்து விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.