இந்தியா

பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி - ஏற்றுக் கொள்ள முடியாமல் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

டி 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

டி 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது இல்லை என சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் தோல்வியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் விடுதி அறைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமால் காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.